வைகாசி மாதம், மகாசிவராத்திரி, ஆடிவெள்ளி, செவ்வாய், வாரங்களில், திருவிழா ஐந்தாவது, ஏழு அல்லது 9 வது ஆண்டுகளில் ஒற்றை அடிப்படையில் குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுகிறது. பூசாரியின் அருள்வாக்கு மூலம் பல நன்மைகள் நடந்துள்ளன.
தல சிறப்பு:
இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6.30 முதல் 2 மணி, மாலை 4 முதல் 6 மணிதிறந்திருக்கும்.
வாசலில் இடது பக்கம் குதிரை வாகனத்தில் அய்யனார் சுவாமி, வலது பக்கம் குதிரையில் கருப்பணசாமி, பட்டத்து குதிரை தூர்வாங்சுவாமி, இரண்டாவதாக காவல்காரதேவர் குதிரை, மூன்றாவதாக சேர்வார்குதிரை சுவாமிகள், மற்றும் பரிவார தெய்வ சிலைகள் அமைந்துள்ளன. மூலவர் கற்பூர தெய்வமாக அய்யனார்சுவாமியும், மணிமண்டபத்தில் அய்யனார் சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
கேட்ட வரத்தினை பெற இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
இக்கோயிலில் 2012ல் ராஜாகோபுரம் காட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தல வரலாறு:
இக்கோயிலை வைத்தே, இந்த கிராமத்திற்கு, மேலக்கால் பெயர் வரக்காரணமானது. மழை காலத்தில் வீணாகிசெல்லும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு பெரிதான குளம் கட்ட இக்கிராமமக்கள் முடிவெடுத்து, வனப்பகுதியில் மண்வெட்டினர். அப்போது 15 அடி ஆழத்தில் சுவாமி பீட சிலைகள் கிடைத்துள்ளன. அதனை பார்த்த மக்கள் சிலருக்கு அருள்வர, அங்கேயே கோயில்கட்டி வழிபாடும் நடத்தது. குளம் தோண்டிய மண்ணில் கோயில் எழுப்பப்பட்டது. அதுமுதல் கிராம மக்கள் குலதெய்வங்களாக வணங்கி வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது சிறப்பு.