அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கைலாசநாதர் |
|
அம்மன்/தாயார் | : |
மாணிக்கவல்லி தாயார் |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
கமலாலயம் |
|
ஊர் | : |
திருவாரூர் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 10 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்
கீழ வீதி, திருவாரூர். |
|
| | |
|
போன்: | | | | | |
+91 99435-03876 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இத்திருக்கோயிலில் இரண்டு நிலைக் கோபுரங்களுடன் மேற்கு பக்கம் வாசல் அமைந்துள்ளது. தியாகராஜர் கோயிலை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் கம்பீரமாய் ஈசன் காட்சியளிக்கிறார். தனது வலது புறத்தில் சாந்த சொரூபியாய் மாணிக்கவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவனுக்கு இடது பக்கத்தில் வெற்றி வேல் முருகனும், வலது பக்கத்தில் விநாயகரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். மேலும் சண்டிகேஸ்வரர் தனி சந்நிதியில் அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்.கைலாயம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வணங்கினாலோ அல்லது அர்ச்னை செய்தாலோ சிறப்பு உண்டு. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
திருவாரூர் கீழ வீதியில் கயிலாசநாதர் திருக்கோயில் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், புரான சிறப்பும் பெற்றது. இங்கு மாணிக்கவல்லி தாயாரும், கயிலாச நாதரும் பக்கதர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகின்றனர். திருவாரூரில் அமைந்துள்ள சிவனுக்கான கோயில்களில் இக்கோயிலும் சிறப்புடையதாகும். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
மிகவும் பழமைவாய்ந்த (300 ஆண்டுகள்)சோழர் காலத்தில் கட்டப்பட்டக் கோயில் பல்வேறு ஆக்கிரமிப் புகளில் சிக்கியதால் கோயில்கள் இருப்பிடமே தெரியாத வகையில், யாரும் கண்டு கொள்ளாததால் அங்கிருந்த சிவலிங்கம் உள்ளிட்டவைகள் கேட்ப ராற்று பல காலங்களாக கிடந்தது. கடந்த 2009ம் ஆண்டு ஜூன் முதல் தேதியன்று கீழ வீதியில் உள்ள சக்கரை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ இருந்த சமயத்தில் யாக சாலை பணிகளை முடித்து கோயில் அர்ச்சகர் செல்வம் கோயிலில் சற்று கண் அயர்ந்தார். அப்போது அவர் கனவில் என்னைப்பார்,என்னைப்பார் என்ற அசரீரியாய் குரல் ஒலித்தது. திடுக்கிட்டு கண் விழித்தவர் மீண்டும் கும்பாபிஷேகப்பணியில் ஈடுபட்டார். அன்றைய இரவு அவர் கனவில் தோன்றிய ஈசன் பல காலமாக பராமரிப் பிலாமல் கிடப்பதாகவும், விரைவில் கும்பாபிஷேகம் செய்து முடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அன்று இரவே அப்பகுதியினர்களுடன் சென்று பார்த்த போது சிவன் மண்ணில் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார். உடன் மறுநாள் சிறு கீற்றுக் கொட்கை கட்டி பூஜித்துள்ளார். கடந்த ஜூலை 2013, 14ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடந்தது. |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|