கோயிலின் நுழைவாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. சிவன் கிழக்குப்பக்கம் அமர்ந்துள்ளார். சிவனை பார்த்த வகையில் பலி பீடத்திற்கு முன் வலது பக்கம் கழுத்தை சாய்த்தப்படி நந்தி அமைந்துள்ளது. கோயிலில் பிற தெய்வங்கள் தனித்தினி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்
பிரார்த்தனை
திருமணத்தடை விலக, புத்திரபாக்கியம் கிடைக்க, நாணமார்க்கம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
இக்கோயில் ஏழு பிரகாரமாக இருந்துள்ளது. காலப்போக்கில் சிதலமடைந்தது. அப்பகுதியினர் பராமரித்து 1916 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. 1941 ஆம் ஆண்டு காஞ்சிபெரியவா நடை பாதையாக வந்து மூன்று நாள் தங்கி சிவனை வணங்கியுள்ளார். நாணமார்க்கத்திற்கு சிறப்பானது என காஞ்சி பெரியவா தெரிவித்துள்ளார். மூலவர் ஆவுடையார் முதல் லிங்கம் வரை ஆறே முக்கால் அடி உயரமும், அம்மன் ஐந்தே முக்கால் அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார்கள்.
முற்காலத்தில் இங்கு வந்த சுமங்கலிப்பெண்கள், மங்கலம் பூரிக்கும் படியாய் விடம்-பிரசாத வெற்றிலை வைத்து பெரியோர்களிடத்தில் ஆசி பெறுவதற்கு, தெருக்களில் வீடுதோறும் ஆயிரக்கணக்கில் வெற்றிலை பாக்கு மங்களச்சுருள்கள் மூங்கில் கூடைகளிலும், தட்டுகளில், தாமரை இலைகளில் எப்போதும் வைக்கப்பட்டிருந்ததால் பின் நாளில் விடையபுரமாகியுள்ளது.
தல வரலாறு:
திருவாரூர் அருகே உள்ள கல்யாணமகாதேவி தலத்தின் கல்யாண மீனாட்சியின் ஆதிமூலத்தோற்றம் விடயபுரம். இங்கு மீனாட்சியை தரிசித்து, கல்யாணமகாதேவி சிவதலத்தில் கல்யாண மீனாட்சியை வழிபடுவது தொன்று தொட்டு வரும் சக்திவாய்ந்த வழிபாடு ஐதீகமாகும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி தேவி, சர்வ மீனாம்பிகை தேவியர்க்கும் மூத்த அம்பிகையாய்ச் சதுர்கோடி யுகங்களிலும் துலங்கி அருள் பாலித்துள்ளார்.
ராதை, பார்வதி, திருமகள், சரஸ்வதி, சாவித்ரி, ஆகிய பஞ்சமாதேவி வழிபாடுமுற்காலத்தில் இருந்துள்ளது. பாண்டவர்கள் நதிக்கரை தலமான இப்பகுதியில் கிருஷ்ண பரமாத்மா ராதையுடன் தோன்றி, அருகில் உள்ள ராதா நல்லூர் தலத்தில் நவராத்திரி பூஜையை கொண்டாடி, ராதா கல்யாணத்தின் பல வைபவங்களையும் நிகழ்த்தியுள்ளார்.
கிருஷ்ணர் தோன்றிய நந்தன தமிழ் வருடத்தை நவராத்திரிக்கான விசேஷத்தலமாக விடயபுரம் சிவ,விஷ்ணு பூமி சிறப்பிடம் பெறுகிறது. இங்கு ஒன்பதுநாட்கள் தங்கி நவராத்திரிப் பூஜைகள் செய்வதால், வரம், வளங்களை வார்த்துப் பல தலைமுறைகளையும் கடைத்தேற்றி சந்ததிகளையும் நன்கு தழைக்க வைக்கும் சிறப்பிற்குரியது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வலது பக்கம் கழுத்தை சாய்த்தப்படி நந்தி அமைந்துள்ளது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூர்-தஞ்சை சாலையில் 15 கி.மீ., தொலைவில் கொரடாச்சேரி. இங்கிருந்து 7 கி.மீ., தொலைவிலும், மன்னார்குடி சாலையில் கமலாபுரத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும் விடையபுரம் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கொரடாச்சேரி, திருமதிக்குன்னம்.
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538.