இத்திருக்கோயில் ராஜகோபுரத்தின் கிழக்குபக்கம் வழி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயில் இடபக்கம் காளி தனி சன்னதியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். செல்வகணபதி, பைரவர், வள்ளி தெய்வானையுடன் பாலமுருகன், தட்சிணாமூர்த்தி,துர்க்கை, சனீஸ்வரன் ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும் அன்னதானம் அளித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
இங்கு காளி பூஜைசெய்ததால், சிவன் நேரில் காட்சி கொடுத்த பெருமை இந்த தலத்திற்கு உண்டு, அதை மெய்பிக்கும் வகையில் கோயில் நுழைவு வாயில் இடப்பக்கம் தட்சிணாமூர்த்திக்கு பின்னோக்கி 20 அடி தொலைவில் தனி சன்னதியில் காளி அருள்பாலிக்கிறார். திருவாரூரில் அமைந்துள்ள சிவனுக்கான கோயில்களில் இக்கோயிலும் ஒன்று.
முற்காலத்தில் மன்னார் தெரிவிக்கும் செய்திகளை மக்களுக்கு தெரிவித்து வந்த ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் இப்பகுதியில் முதல் முதலாக ஓட்டு வீட்டில் குடியிருந்துள்ளனர். அதுவே பின்னாளில் ஒட்டுக்குடியாகி பின்னர் ஒட்டக்குடியாக மறுவியதாக செவிவழிச் செய்தியால் கூறப்படுகிறது. அப்பர் இக்கோயில் குறித்து வைப்பு பாடலாக பாடியதாக சோழர்காலத்து கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடந்து வருகிறது.
தல வரலாறு:
பன்னெடுங்காலத்திற்கு முன் இங்கிருந்த சிவன் கோயிலில், காளிதேவி தன் கோபம் தீரவேண்டி தவம் இருந்து ஈசனை தியானித்து பூஜை செய்த போது ஈசன் நேரில் தோன்றி காளிக்கு காட்சிக் கொடுத்ததால் இங்குள்ள ஈசனுக்கு திருநன்காளீஈஸ்வரர் என அப்பகுதியினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சகல ஐஸ்வர்யங்கள் மற்றும் தோஷங்கள் நீங்க சிறந்த பரிகாரத் தலமாக அழைக்கப்பட்டதால், கி.பி.,1133 ஆம் ஆண்டு, இரண்டாம் குலோத்துங்க சோழன் இக்கோயிலுக்கு திருப்ணி செய்து அருள்பொழித் தேவவளநாடு என்று இவ்வூருக்கு தன் விருது பெயரான எதிரிலி சோழன் என்பதை எதிரிலி சோழபுரம் என இந்த ஊருக்கு சூட்டி மகிழ்ந்துள்ளான். அதன்பின் கி.பி., 1246ல் ஆட்சி செய்த மூன்றாம் இராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து தன் பெயரை சேர்த்து ஒட்டக்குடி இராஜேந்திரசோழபுரம் என பெயர் மாற்றம் செய்ததாக வரலாற்று செய்தி கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஈசான மூலையில் சண்டிகேஸ்வரருடன், சண்டிகேஸ்வரியும் அருள்பாலிப்பது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ.,தொலைவிலும், குழிக்கரை ரயில் நிலையத்தில் இருந்து தெற்கே முக்கால் கி.மீ.,தொலைவில் தெற்கு திசையில் ஒட்டக்குடி கிராமம் உள்ளது. திருவாரூரில் இருந்து மன்னார்குடிசெல்லும் பஸ்சில் ஏரி குழிக்கரையில் இறங்கி வடக்குப்பக்கம் 1 கி.மீ., உள்ளே சென்றால் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538