தமிழ் வருடபிறப்பு, வைகாசி விசாகம் எட்டு நாள் திருவிழா, சிவராத்திரி, அமாவாசை ஹோமம்
தல சிறப்பு:
இங்குள்ள அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
குவளைக்கால், மூங்கில் குடி அஞ்சல்,
நன்னிலம் தாலுகா, திருவாரூர்-610101.
போன்:
+91 7373954622
பொது தகவல்:
இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள மகாமண்டபத்தில் 300 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். ஒரு கலசம் கொண்டு கற்பகிரகம் அமைந்துள்ளது. முகப்பில் மணிக்கு தனி மண்டபம் அமைத்து ஒரு சிறிய கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மகாமாரியம்மன் கருவறையில் பட்டாடையில் தங்க நகைகளுடன் கம்பீரமாய் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தின் தெற்கு பக்கம் ஈஸ்வரி, மேற்கே வைஷ்ணவி, வடக்கே பிரம்மதேவி பார்த்த வண்ணம் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. உற்சவர்களாக காத்தவராயசாமி, சின்னாசாமி, ஆரியமாலா, கருப்பழகி, கருப்பண்ணசாமி துணைவியருடன், லாடசாமி உள்ளனர். மகா மண்டபத்தில் வடக்குப் பார்த்த வண்ணம் பேச்சியம்மனும், அர்த்தமண்டபத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் விநாயகர் மற்றும் ஆதி அம்மனும் அருள் பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, செய்வினை கோளாறு மற்றும் உடல் நல பிரச்சனைகள் தீர இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அமாவாசை வேள்வி பூஜையில் பங்கேற்றும், அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
முன் நாளில் இப்பகுதி குமுத வனம் என அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தாமரை மலர்கள் அதிகளவில் மலர்ந்ததால் திருவாரூர் தியாகராஜருக்கு மலர் அபிஷேகத்திற்கு இங்கிருந்து மலர்கள் அனுப்பியதால் குமுதவனம் என அழைக்கப்பட்டு பின்நாளில் பலவடிவ நிலையில் குவளைக்கால் என மறுவியுள்ளது.இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஊருக்கும் வட மேற்கே ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயிலும், தெற்கே திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் உள்ளது. கோயில் நல்ல வேலைப்பாடுகளுடன் பல்வேறு கலை நுணுக்கங்களுடன் சிற்பங்களுடன் கோயில் முழுவதிலும் ஒன்பது கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளது
தல வரலாறு:
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வயல் சூழ்ந்தப்பகுதியில் கிராமம் இருந்ததால் அப்பகுதியில் சிறிய கொட்டகையில் அம்மன் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. விவசாயம் செழித்தோங்கியதால் புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானிங்களை வைத்து வழிபாடு நடத்தினர். அதன் பின் அப்பகுதியில் சிறுவன் ஒருவன் வாய்பேச முடியாமல் இருந்தான். இக்கோயிலில் வழிபாடு நடத்தியபின் அம்மா என்று அழைத்துள்ளான். அதன் பின் அப்பகுதியினர் சிறு கோயிலாக கட்டி வழிபாடு நடத்திவந்தனர். சில காலங்களில் சிதைந்துள்ளதையடுத்து அப்பகுதியினர் வரி சூல் செய்து மிகப்பெரிய அளவில் கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள அம்மன் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ.,தொலைவில் மூங்கில்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 1 கி.மீ., தொலைவில் குவளைக்கால் உள்ளது. ஊருக்கு மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020.