கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. கற்பகரகத்தில் ஒரு கலசம் அமைந்துள்ளது. அகஸ்திஸ்வரர் மற்றும் வள்ளிநாயகி தனி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், தெற்குபக்கம் தட்சிணாமூர்த்தி, வடக்கு பக்கம் பிரம்மா, பலி பீடம், அதிகார நந்தி அருள்பாலிக்கிறார்கள். மகாமண்டபத்தில் சுமார் 100 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
கடந்த 1956, 1996 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அகஸ்திய முனிவர் சிவனை பூஜித்த ஸ்தலம்.
தல வரலாறு:
உலகம் சமநிலை அடைய அகஸ்திய முனிவர் வேதாரண்யத்திற்கு செல்லும் வழியான இங்கு தங்கி சிவனுக்கு பூஜை செய்ததால் அப்பகுதியினர் கோயில் கட்டி அவருடைய பெயரால் அகஸ்தீஸ்வரர் என அழைக்கப்பட்டனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அகஸ்திய முனிவர் வழிபட்ட தலம்.