Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அங்காளபரமேஸ்வரி
  தல விருட்சம்: வேம்பு, அரசு
  தீர்த்தம்: கூத்தன்குளத்து தீர்த்தம்
  ஊர்: வேளுக்குடி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி, ஆடிவெள்ளி, ஆவணியில் சம்பத்ரா அபிஷேகம், சண்டிஹோமம், அமாவாசை ஹோமம்.  
     
 தல சிறப்பு:
     
  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறந்த கோயிலுக்கான விருதை காஞ்சி சங்கர மடத்தின் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் கடந்த 2000 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளார் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வேளுக்குடி, திருவாரூர் மாவட்டம்-610 102.  
   
போன்:
   
  +91 4367-234367,9865291605; 9659985390 
    
 பொது தகவல்:
     
  கோயிலின் தெற்குபக்கம் ஐந்து நிலை ராஜகோபுரம், கோபுரத்தில் ஐந்து கலசம், கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைந்துள்ளது. கோயிலின் பிரகாரத்தில் நடராஜர், மயானருத்திரர், பேச்சியம்மன்,  அர்த்த மண்டபத்தில் வலது பக்கம், கிழக்குப்பக்கம்பார்த்த வகையில் கங் காளருத்ரரும்(லிங்கம்)வினாயகரும், அருகில் தெற்கு முகம் பார்த்த வகையி ல் அகோர வீரபத்திரர்  அவர் அருகில் சக்தியும், சற்று தொலைவில் தட்சன் ஆட்டுத்தலையுடன் நிற்பதுடன், வலதுபக்கம் மயான ருத்ரர் சிவசக்தி ரூப அம்பாளும், அருகில் மேற்கு பக்கம் விநாயகரை பார்த்த வண்ணம் சப்தகன்னிகள் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தில் மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மியம்மாளுடனும், பாவாடைராயன் காந்தழகி, கந்தர்வழகியுடன் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பார்த்த வண்ணம் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. பேச்சியம்மன் பத்து கரங்களுடன் சிங்கமுக வாகனம் எதிரில் அமர்ந்திருக்கும் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இருளன் காட்டேரியுடன் தனி சன்னதியிலும், காத்தவராயன் ஆரியமாலா மற்றும் கன்னியம்மாளுடன், காவலாளி தொட்டியத்து சின்னானுடன் தனி சன்னதியிலும், கருப் பண்ணசுவாமி கருப்பாயி அம்மனுடன் தனித்தனி சன்னதியிலும் மேற்கு பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, புத்திரபாக்கியம்,நோய் நீங்கவும், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை கோளாறு நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், கால்நடைகள் உயிருடன் (ஆடு, மாடு,கோழி, புறா) செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  கோயில் ஸ்தாபகர் திரு.சடையப்ப பூஜாரி இக்கோயிலில் நிகழ்த்திய கலை நிகழ்ச்சியை பார்த்து, தஞ்சை மன்னர் ராஜராஜசோழன் பரம்பரயை சேர்ந்த சரபோஜி மன்னர் பாராட்டி, அவர் பயன்படுத்திய கேடயம் மற்றும் வீரவாளினை பரிசாக அளித்து, பின்னர் சுவாமி தரிசனம் செய்துள்ளார். பல்வேறுப்பகுதியில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு பக்தர்கள் வந்துசெல்கின்றனர். மூன்று வினாயகர் கோயில்கள் மற்றும் இரு சிவன் கோயில்கள் உள்ள பகுதியில் அங்காளபரமேஸ்வரி அருள்பாலிப்பது பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்  
     
  தல வரலாறு:
     
  மிகவும் பழமையான கோயில் (ஈசனின் திருவிளையாடலில் ஒன்றான தட்ச யாகபரணி நிகழ்வை கூறும் கோயில்) ஈசனின் திருவிளையாடலில் ஒன்றான தட்சயாகபரணி நிகழ்வை மையக் கருத்தை முன் வைத்து கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தக்கன் தான், நடத்திய வேள்வியில்  திருமால், பிரம்மன், அக்கினி, இந்திரன், சூரியன் உள்ளிட்டவர்களை அழைத்தவர். ஈசனை அழைக்கவில்லை. இதை அறிந்த பார்வதி தன்,  தந்தை நடத்தும் வேள்விக்கு சென்று வரவும் ஈசனை அழைக்காமல் வேள்வி நடத்தியது தவறு என்பதை சுட்டிக்காட்டவும்  ஈசனிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு ஈசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாக்குவாதம் செய்து, ஈசன் அனுமதியில்லாமல், அவர் வார்த்தையை மீறி வேள்வி நடக்கும் இடத்திற்கு பார்வதி சென்றார். அங்கு அவர் தந்தையால் புறக்கணிக்கப்பட்டார். மேலும் தன் கணவரான ஈசனை அழைக்காமல் நடத்திய வேள்வியை அழியட்டும் என சாபமிட்டு  விட்டு சிவபெருமானிடம் சென்றபோது, ஈசன் பார்வதி மேல் கோபப்படுகிறார். இதனால் பெண் புத்தி பின் புத்தி என்பதை உணர்ந்தேன் மன்னித்து ஏற்க வேண்டினார். மனம் குளிர்ந்த ஈசன் சோதனை நடத்தியதாக கூறி பின்னர் ஏற்றார். அதற்கான வேள்வி இந்த பகுதியில் நடந்ததாக கருதி இங்கு அப்பகுதியில் 400 ஆண்டிற்கு முன் தெருக்கூத்து கலைஞரான சடையப்ப பூஜாரி அங்காள பரமேஸ்வரியை முன்னிலைப்படுத்தி கோயில் அமைத்தார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறந்த கோயிலுக்கான விருதை காஞ்சி சங்கர மடத்தின் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் கடந்த 2000 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளார் என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar