ஆண்டுதோறும் ஆனியில் ஏழு நாட்கள் திருவிழா, ஒவ்வொரு தமிழ் மாதம் செவ்வாய் அன்று விளக்கு பூஜை, பவுர்ணமி பூஜை, மார்கழி பூஜை, நவராத்திரி, கோகுலாஷ்டமி உற்சவங்கள்
தல சிறப்பு:
இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இக்கோயிலில் முன் ராஜகோபுர அமைந்துள்ளது. உட்பிரகாரத்தில் அங்காள பரமேஸ்வரியம்மன், குருநாதசுவாமி, இருளப்பசுவாமி, வீரபத்திரசுவாமி, வலதுபுறம் கருப்பணசுவாமி, பேச்சியம்மன், ராக்காயி, இருளாயி ஆகியோர் தனித்தனி சன்னதிகள் உண்டு. விநாயகர், முருகன் அர்த்தமண்டபம் முன் குடிகொண்டுள்ளனர்.
பிரார்த்தனை
திருமணம், குழந்தைவரம், தொழில் விருத்தியடைய, விவசாயம் செழிக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு பச்சை, சிவப்பு சேலை சார்த்தியும், அக்கினிச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், விளக்குபூஜை, கரும்பு தொட்டில், பால்குடம் போன்ற அனைத்துவிதமான நேர்த்திக்கடனையும் செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
இளங்காளியம்மன் சக்தி வாய்ந்த தெய்வம்.
தல வரலாறு:
600 ஆண்டுக்கு முன் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். புராதன சிறப்பு மிக்க இக்கோயிலை, இப்பகுதி விவசாயிகள் விரிவாக கட்டி தொடர்ந்து விழாக்கள் எடுத்து அருள்பெற்று வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.