கிழக்கு நோக்கி மூன்று நிலை ராஜகோபுரம், கொடிமரத்து விநாயகர், பலி பீடம், மூலவர் சோழிஸ்வரமுடையார் வலது புறத்தில் பிரதான விநாயகர், இடது புறத்தில் அம்பாள் சவுந்தரநாயகி,உட்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், , சிவதுர்கை, சண்டிகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, தனி, தனி சன்னதிகள் மற்றும் பைரவர், பிடாரி, ஐயனார், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், சூரியன் ஆகியோர் தனி தனியாக அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
இத்தலம் அனைத்துவித பரிகார தோஷங்களும் நிவர்த்தியாவதால் பெரும்பாலான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றன.
நேர்த்திக்கடன்:
தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்களால் இயன்றதை கோயில் விசேஷங்களுக்கு வேண்டியதை கொடுத்து நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.
பரம்பொருளாகிய மகேசுவரனை நிந்திப்பதற்காக மிகப் பெரிய யாகத்தை நடத்த திட்டமிட்டு முதல் அவிர்பாகம் ஏற்க சர்வேசுரனை அழைக்காது இதர தேவர்கள் துணைக் கொண்டு யாக வேள்வியை துவக்கினான். தாட்சாயணியும் தட்சனுக்கு நல்லுரை கூறியும் கேளாது, தட்சனின் சிவநிந்தனை பொறுக்காது வேள்வித் தீயினில் பாய்ந்தாள். சதிதேவி யாகத்தீயில் பாய்ந்ததை அறிந்த மகேசன், வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்தார். இவை அனைத்தையும் கண்டும் காணாதது போலிருந்த அமரர்குலம் சிவநிந்னைக்குள்ளானது. மீண்டும் அசுர குலம் தழைத்து சூரபதுமன் தலைமையில் தேவருலகத்தை துன்புறுத்த நான்முகன், நாராயணனோடு முப்பது முக்கோடி தேவர்களும் மகேசுவரனை தஞ்சம் புகுந்தனர். அப்போது அசுரகுலத்தை அழித்திட முக்கண்ணின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய பொறி கனலாகி கந்தன் எனும் உருவெடுத்தது. அசுரர் கூட்டத்தை அழித்திடுமாறு ஆறுமுகனுக்கு உத்தரவிடப்பட்டது.அதனை சிரமேற்று முருகப் பெருமான் சிக்கலில் வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேலை பெற்று செந்துõரில் அசுரர் கூட்டத்தை அழித்தார். அசுரர்களை வதம் செய்த முருகனுக்கு வீரகத்தி தோஷம் ஏற்பட ஈசனிடம் முறையிட்டார். முருகப் பெருமான் வடதிசையில் தமக்கு விருப்பமான பதரிவனத்தில் தவமிருந்து பஞ்சலிங்க, துவாரலிங்க பூஜை செய்திடுமாறு பணித்தார். அதன்படி முருகப் பெருமான் முதலில் கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மனை வணங்கி விட்டு பதரிவனத்தில் மஞ்சளினால் ஒரு விநாயகர் திருமேனியை நிறுவி வழிபட்டார்.அதன்பின் கடம்பவனத்தில் பாதாள கங்கையில் நீராடி, கைலாசநாதர் திருமேனியை நிறுவி வழிபட்டார். அடுத்து சிவகங்கை தீர்த்தத்தை உருவாக்கி கங்காளநாதரை வழிபட்டார். அடுத்து விசாலாட்சியுடன் விசுவநாதரை நிறுவி வழிபட்டவர், சவுந்தரநாயகியுடனுறை சோழீஸ்வரரை நிறுவி வழிபட்ட தலம் இளங்கடம்பனூர். பஞ்சகடம்பத்தலங்களில் ஒன்று.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சோழி வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக மூலவர் இங்கு இருப்பது சிறப்பம்சமாகும்.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து ஆழியூர் வழியாக நாகூர் செல்லும் சாலையில் ஆழியூரில் இருந்து 7 கி.மீ.,தொலைவிலும்,நாகை இ.சி.ஆர்., சாலையில் இருந்து செல்லூர் சாலை வழியாக சென்றால் 6 கி.மீ.,தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
நாகூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : நாகப்பட்டினம்
சீ ஹார்ஸ் போன்: +91-4365-247 047, 247 686 பூம்புகார் லாட்ஜ், போன்:+91-4365 242138, 243039 வேளாங்கன்னி எம் ஜி எம் போன்: +91-4365-263 900 சீ கேட் போன்: +91-4365-263 910 கோல்டன் சென்ட் லாட்ஜ்: +91-4365-242432 வி.பி.என்.ஹோட்டல்: +91-4365-240678 ஹோட்டல் சுபம் பார்க்,ஏ/சி: +91-4365-251000, 99420-42588