கொட்டை முத்துக்கள் அதிகம் விளைவிக்கப்பட்டதால் கொட்டையூர் என்றும் அதன் வித்துக்களை எடுத்து எண்ணெய்க்காக அனுப்பியதால் வித்தானபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
சித்தி விநாயகர் கோயிலில் கிழக்குப்பக்கம் நுழைவு வாயில், பலிபீடம் மற்றும் மூஞ்சுறு வாகனம், பின் பக்கம் இடது பக்கம் மன்மதன் (காமன்- லிங்கமாக) வலப்பக்கம் மாரியம்மன் கிழக்குபக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். மூலவரான சித்திவிநாயகர் தனி சன்னிதியில் கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றார். இதேபோன்று அருகில் தனி சன்னிதியில் வடக்குப் பக்கம் பார்த்த வகையில் செல்லியம்மன் அருள்பாலிக்கிறார். எதிரில் பலிபீடம் உள்ளது. 500 ஆண்டுகள் முற்பட்ட கோயிலாகும். 2014 பிப்ரவரி 9-ம்தேதி புதிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பிரார்த்தனை
செல்லியம்மன் குலதெய்வ வழிபாடாகவும், விநாயகரை கல்வி மற்றும் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும் வழிபாடு செய்து பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் நவதானியங்கள் காணிக்கையாகவும், வைகாசியில் நடக்கும் திருவிழாவில் தீ மிதித்தல், கரகம் புறப்பாடும், பால்குடம் எடுத்தல், மாவிளக்கு, கஞ்சி வார்த்தல், விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகளும் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
நீடாமங்கலம், சந்தானராமர், யமுனாம்பாள், ஆலங்குடி குருபகவான் மற்றும் கொட்டையூர் அகஸ்தீஸ்வரர் கோயில்கள் இங்கு இருப்பதால் மேலும் சிறப்பு சேர்க்கிறது.
தல வரலாறு:
உலகம் சம நிலைய அடைய அகஸ்திய முனிவர் செல்லும் போது சிவனை பூஜித்து சென்றார். அதனால் அப்பகுதியில் அகஸ்தீஸ்வரர் சிவன்கோயில் உள்ளது. கிராமங்களில் செல்வ செழிப்பு ஏற்படுவதற்கு சித்திவிநாயகர் மற்றும் கிராம தேவதையாக செல்லியம்மனையும் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னாளில் கோயில் கட்டப்பட்டது. கோயில் பழுதடைந்ததால் பலர் குலதெய்வ வழிபாடு நடத்தினர். தற்போது கிராமத்தின் சார்பில் வரி வசூல் செய்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளனர். அகஸ்தீஸ்வரர் கோயிலை முன் வைத்து சித்தி விநாயகர் மற்றும் செல்லியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோயிலில் இடது பக்கம் மன்மதன் (காமன்- லிங்கமாக) வலப்பக்கம் மாரியம்மன் கிழக்குபக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர்.
இருப்பிடம் : திருவாரூர்- தஞ்சை சாலையில் நீடாமங்கலத்தில் இருந்து 2 கி.மீ., கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 22 கி.மீ., ஆலங்குடி குருபகவான் கோயிலில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020