| அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
| |
|
|
| |
|
|
|
|
மூலவர் | : |
மாகாளேஸ்வரர் |
|
|
உற்சவர் | : |
மாகாளேஸ்வரர் |
|
|
அம்மன்/தாயார் | : |
காமாட்சி அம்மன் |
|
|
தல விருட்சம் | : |
வன்னி மரம் |
|
|
ஆகமம்/பூஜை | : |
சிவ ஆகமம் |
|
|
ஊர் | : |
பெரிய காஞ்சிபுரம் |
|
|
மாவட்டம் | : |
காஞ்சிபுரம்
|
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
| |
|
|
 |
திருவிழா: |
 |
| |
|
|
| |
பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை, ராகு காலம் (வெள்ளி – காலை 10:30 – 12:00 மணி, ஞாயிறு – மாலை 4:30 – 6:00 மணி), கார்த்திகை சோமவாரம் |
|
| |
|
|
 |
திறக்கும் நேரம்: |  | |
|
| | | | | காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். | | | | | |
 |
முகவரி: |  | | | | | | |
அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில்,
ஜவஹர்லால் தெரு,
பெரிய காஞ்சிபுரம் - 631 502 |
|
| | | |
 |
போன்: |  | | | | | | |
+91 442 – 722 2049 | |
|
| | |  |
பொது தகவல்: |  |
| |
|
|
| |
கல்வியிற் கரையிலா காஞ்சி மாநகரில் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளது. |
|
| |
|
|
|
| |
 |
பிரார்த்தனை |  | |
|
| | | |
மன நிம்மதி, மன வலிமை, ராகு - கோது தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் நிவர்த்தி கிடைக்கும் | | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  | |
|
| | | |
ராகு காலத்தில் இங்கு வந்து மாகாளேஸ்வரிடம் வேண்டுங்கள். பின் நெய் தீபத்தை ஏற்றி பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள். பிறகு பாருங்கள். உங்களது பிரச்னை எல்லாம் எப்படி காணாமல் போகிறது என்று. இக்கோயிலின் மற்றொரு சிறப்பு நவக்கிரகம். எல்லாக் கோயில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்களே முழுவதும் கோயிலாக உள்ளனர். | | | |
| |
 |
தலபெருமை: |  |
| |
|
|
| |
கர்ப்பக்கிரகத்தில் ராகு - கேது சிவபெருமானுடன் உள்ள திருக்கோலக்காட்சி அமைந்துள்ளது. இத்தலத்தில் பக்தர்களின் குறை நிவர்த்திக்காக ஒன்பது கிரகங்கள் தனித்தனி சன்னதியில் தம்பதி சமேதராய் மிகச் சிறப்பாக அமைந்து அருள்பாலிக்கின்றனர். மேலும் ராகு- கேது தனித்தனி சன்னதிகளில் அமையப்பெற்றுள்ளது. பரிகார நிவர்த்திகாக வரும் பக்தர்களின் வேண்டுதலை ஏற்று அருள்பாலித்து அருள்நலம் வழங்கி வருகின்றார்.
வித்தியாசமான சிற்பம்
சிவபெருமானும் பார்வதி தேவியும் அருகருகே வீற்றிருக்கிறார்கள். எப்போதும் தன்னுடைய கரங்களில் மழுவையும், மானையும் ஏந்தியுக்கும் சிவபெருமான். இந்த சிற்பத்தில் தன்னுடைய இரு கரங்களில் ஒரு பக்கம் ராகுவையும், மற்றொரு பக்கம் கேதுவையும் தாங்கியபடி இருக்கிறார். இந்த வடிவத்தை வழிபடுபவர்களுக்கு, ராகு-கேது தோஷம் நீங்கும். சிவபெருமான் கரங்களில் தவழும் ராகுவும், கேதுவும் மனித முகத்தோடு இருப்பது கூடுதல் சிறப்பு. |
|
| |
|
|
|
 |
தல வரலாறு: |  |
| |
|
|
| |
ராகு கேது என்றவுடன் நம் மனதில் பாம்பின் உருவம்தான் தோன்றும். இந்த நிழல் கிரகங்கள் நமது வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவர்களால் பித்ருக்களின் சாபம், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற தடைகள் ஏற்படுகின்றன. இதை சரி செய்ய ஒருவர் உங்களுக்காகவே காஞ்சிபுரத்தில் இருக்கிறார். அவர்தான் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள மாகாளேஸ்வரர். காளஹஸ்தியில் வாழ்ந்து வந்த மாகாளன் என்னும் பாம்பு, தனக்கு முக்தி வேண்டும் என்று சிவபெருமானிடம் முறையிட்டது. பின் அவரது கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு முக்தியும் அடைந்தது. இதுதான் இக்கோயிலின் வரலாறு. வாருங்கள். கோயிலுக்குள் செல்வோம். உள்ளே நுழைந்ததும் சின்ன சின்ன சன்னதிகள் கண்களுக்கு தென்படும். இவற்றை கடந்து சென்றால் மாகாளேஸ்வரர் தரிசனம். சன்னதிக்கு சென்றவுடன் மனசெல்லாம் ஏதோ அலாதியான நிம்மதி ஏற்படும். சிறிய விளக்கின் வெளிச்சத்தில் தெரியும் ஈசனை பார்த்தால் மனசின் வலி தெரியாது. அவரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும். இக்கோயில் பல்லவ மன்னர் ராஜசிம்மனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
|
|
| |
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
| |
|
|
| |
அதிசயத்தின் அடிப்படையில்:
பல்லவ மன்னர் ராஜசிம்மனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிவபெருமான் தன்னுடைய கையில் ராகுவையும், கேதுவையும் மனித முகத்துடன் ஏந்தியிருக்கும் சிற்பம் சிறப்பு.
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|