Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தெய்வநாயகேஸ்வரர், அரம்பேஸ்வரர்
  உற்சவர்: அரம்பேஸ்வரர்
  அம்மன்/தாயார்: கனககுசாம்பிகை
  தல விருட்சம்: மரமல்லிகை
  தீர்த்தம்: மல்லிகா புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : காமீகம்
  புராண பெயர்: இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர்
  ஊர்: எலுமியன்கோட்டூர்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  தேவாரப்பதிகம்

திருஞானசம்பந்தர்

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான் எனதுஉரை தனதுஉரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் கலையினார் மடப்பினை துணையொடும் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயில் ஆலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணிஎன் னெழில் கொள்வதியல்பே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.
 
     
 திருவிழா:
     
  குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவனை, வருடத்தில் ஏப்ரல் 2 - 7 , செப்டம்பர் 5 - 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 246 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னதாகவே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது. 
   
முகவரி:
   
  அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 44 - 2769 2412, 94448 65714, 96000 43000 
    
 பொது தகவல்:
     
 

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள். இங்குள்ள தலவிநாயகர், குறுந்த விநாயகர். இங்கு சுத்தான்னம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.


அன்னை கனககுஜாம்பிகை தன் பாதத்தில் காஞ்சி மகா பெரியவர் பிரதிஷ்டை செய்த இக்கோயிலில் அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையினை சாய்த்து, கண்களை மூடி, கைகளால் சின் முத்திரை காட்டி, அதைத் தன் யக்ஞோபவீதத்தின் ப்ரம்ம முடிச்சின் மேல் வைத்து ஒரு கரத்தில் திரிசூலமும், மறு கரத்தில் அக்க மாலையும் தாங்கி இருக்கும் கோலத்தைக் காண கண்கள் கோடி போதாது. குரு பெயர்ச்சி நாட்களில் பல்லயிரக்கணக்கான மக்கள் யோக தட்சிணாமூர்த்தியின் அருளினைப் பெற்று பலனடைகின்றனர். அரம்பையர் அமைத்த அரம்பேஸ்வரர் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் வீற்றிருந்து தன்னை வணங்குவோர்க்கு பதினாறு செல்வங்களும் வழங்கத் தயாராக இருக்கிறார். இக் கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, இப்போது பொலிவுடன் திகழ்கிறது. கோயிலில் ஒரு வேத பாடசாலையும் செயல்பட்டு வருகிறது. பல கல்வெட்டுகள் இக்கோயிலில் படியெடுக்கப்பட்டுள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  தெய்வநாயகேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும். 
    
நேர்த்திக்கடன்:
    
  குருதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வணங்கினால் தோஷம் நீங்கும். 
    
 தலபெருமை:
     
 

தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன், "தெய்வநாயகேஸ்வரர்' என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், "அரம்பேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் "எலும்பியங்கோட்டூர்' என்று மருவியது. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.


தங்கள் அழகை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, புதுப்பித்துக் கொள்வது என்று ஆலோசனைக் கேட்க தேவ குரு ப்ரஹஸ்பதியை அணுகினர். அவர், அம்மூவரையும் தெய்வநாயகேஸ்வரரை வழிபடுமாறு கூறினார். அதைக்கேட்ட தேவகன்னியர் தங்கள் தோழியருடன் கூவம் நதிக் கரைக்கு வந்து தெய்வநாயகேஸ்வரரைக் கண்டனர். ரம்பை ஒரு தீர்த்தத்தை அமைக்க, அதில் நீராடிய அனைவரும் தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு, அருகே ஒரு பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தனர். வழிபாட்டுக்குப் பின் அவர்கள், தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர். தெய்வநாயகேஸ்வரர் தீண்டா திருமேனியாகும். பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன. 1983-ஆம் ஆண்டு, இவ்வூரில் இடி விழுந்தது. பெருத்த சேதம் ஏற்படாமல் தன் விமானத்தில் இடியினைத் தாங்கி ஊரைக் காத்தார் தெய்வநாயகேஸ்வரர். 
     
  தல வரலாறு:
     
 

தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக, மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது, சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது, சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.


ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் "இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடு!' என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார்.

தேவகன்னியர்கள் வழிபாடு: அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.


பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை. கோயில் நுழைவுவாயில் அருகே தேவதையர்கள் வணங்கிய சிவன், "ரம்பாபுரிநாதராக' 16 பேறுகளை அழிக்கும் படி, 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் பரமன். பூமியே தேராக, சூரிய சந்திரரே சக்கரங்களாக, பிரம்மன் தேரோட்டியாக, மேரு மலை வில்லாக, வாசுகியே நாணாக, நாராயணப் பெருமானை அம்பாகக் கொண்டு தாரகாக்ஷன், கமலாக்ஷன் மற்றும் வித்யுன்மாலி ஆகியோரின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்தப் புறப்பட்டு விட்டார் பரமன். சாய்ந்த தேரில் இருந்த பரமன் தன் கையில் இருந்த வில்லை தரையில் ஊன்றி நின்றார். தேவர்களையும் தெய்வங்களையும் திரிபுர அசுரர்களிடம் இருந்து காக்க வந்ததால் இறைவனுக்கு தெய்வநாயகேஸ்வரர் என்று பெயர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஏப்ரல் 2 - 7 , செப்டம்பர் 5 - 11 வரையில் சூரியன் தனது ஒளிக் கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar