பதிவு செய்த நாள்
15
நவ
2019
02:11
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், பெரியமாரியம்மன் கோவிலில் நேற்று தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. மல்லசமுத்திரத்தில் உள்ள, பெரிமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த அக்., 31ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த, 6 முதல், 13 வரை தினமும் இரவு, 7:00 மணிக்கு பல்வேறு அறக்கட்டளைதாரர்கள் சார்பாக சுவாமி திருவீதிஉலா நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூமித்தனர். பின்னர் பொங்கல் வைக்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து முக்கிய வீதிவழியாக உலா வந்தது. பின்னர் வண்டிவேடிக்கையும், அலகு குத்துதலும் நடந்தது. தொடர்ந்து வரும், 18 வரை தினமும் இரவு கலைநிகழ்சிகள் நடைபெறும்.