விழுப்புரம்: விழுப்புரம் சங்கர மடத்தில், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்ற சந்திரமவுலீஸ்வரர் பூஜை நேற்று துவங்கியது.நாளை 16ம் தேதி வரை நடைபெறும் இந்த பூஜை தினமும் காலை 8:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. நேற்று நடந்த பூஜையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.நிகழ்ச்சியில், மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் ரமேஷ், வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், நாகராஜன், பா.ஜ., தேசிய பொதுக்குழு சிவதியாகராஜன் உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.