பதிவு செய்த நாள்
16
நவ
2019
01:11
பாலக்காடு: பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், தேர்த்திருவிழா வையொட்டி, நேற்று (நவம்., 15ல்) மந்தக்கரை மகா கணபதி கோவில் தேரோட்டம் கோலா கலமாக நடந்தது.
திருவிழாவின், முதல் நாளில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, கணபதி, சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட தேரில், நான்கு வீதிகளிலும் உலா வந்தனர். இரண்டாம் திருநாளான நேற்று (நவம்., 15ல்), மந்தக்கரை மகா கணபதி கோவில் தேரோட்டம் நடந்தது.
செண்டை மேளம் முழங்க, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக காலை 8.30 மணியளவில் வேதபாராயணம் நடந்தது.இன்று (நவம்., 15ல்) பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சாத்தபுரம் பிரசன்ன கணபதி கோவில்களில், தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணியளவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, ரதோற்சவத்தின் சிறப்பு அம்சமான ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது. விழாவை யொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.