பதிவு செய்த நாள்
16
நவ
2019
01:11
கோவை:கோவை ராம்நகரில் உள்ள ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஐயப்பனுக்கு மண்டல பூஜை நாளை (நவம்., 17ல்) துவங்குகிறது.நாளை காலை 5:30 மணி முதல் சிறப்பு கணபதி ஹோமம், அபிஷேகம், நாம சங்கீர்த்தனம் நடைபெற்று, தீபாராதனையுடன் நிறைவு பெறுகிறது.
மண்டல காலம், 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை, 41 நாட்கள் தினமும், காலை 5:30 மணி க்கு, கணபதி ஹோமத்துடன் அபிஷேகமும், நாம சங்கீர்த்தனமும் நடைபெறும்.மாலை 6:00 மணி முதல், வேதபாராயணம் நடைபெற்று, தீபாராதனையுடன் நிறைவு பெறும். இரவு 8:00 மணிக்கு ஹரிவராசனத்துடன் நடை அடைக்கப்படும்.ஐயப்ப பக்தர்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டு, எல்லா நாட்களும் திரளாக மண்டல பூஜைகளில் கலந்து கொண்டு, ஐயப்பன் அருளை பெறலாம்.