பதிவு செய்த நாள்
19
நவ
2019
02:11
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, நேருநகரில் பிரசித்தி பெற்ற, தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு சபரிமலையில் உள்ளது போல், 18 படி அமைக்கப்பட்டுள்ளது. மண்டல கால பூஜைக்காக, சபரிமலை சன்னிதானத்தின் நடை கடந்த, 16ல் திறக்கப்பட்டது.
இதையடுத்து மண்டல கால பூஜையை முன்னிட்டு, நேருநகர் ஐயப்பன் கோவிலில், அதிகாலை யில் நடை திறக்கப்பட்டு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, நெய் உள்ளிட்ட சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. தர்மசாஸ்தா ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதே போல் பாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை துவங்கியது.