கடலுார்:கடலுாரில் அய்யப்ப பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. கடலுார், மஞ்சக்குப்பம், சபரிகிரீச சஜ்ஜன சேவா சங்கம் சார்பில், மண்டல மகர கால விழா கடந்த 17 ம் தேதி துவங்கியது. அன்று காலை 5:30 மணிக்கு அய்யப்ப பக்தர்களுக்கு யாத்ரா மாலை அணிவித்தல் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு நெய் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று (நவம்., 24ல்) காலை 8 மணிக்கு, அய்யப்ப பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா அபிஷேகம், புஷ்பாபிஷேகம் நடந்தது. பிற்பகல் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. வரும் ஒன்றாம் தேதி அய்யப்ப சுவாமி வீதியுலா நடக்கிறது.