விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமர் மூல மந்திரம், லட்சுமி நரசிம்ம சுதர்சன ேஹாமம் நடந்தது.விக்கிரவாண்டி டோல் பிளாசா எதிரில் தாமரைக்குளத்தில் வீற்றிருக்கும் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சக்கரத்தாழ்வார் அவதரித்த திருநாளாம், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு லட்சுமி நரசிம்ம சுதர்சன ஹோமம் நடந்தது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பகவத் அனுக்ரஹம், புண்யாஹவாசனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், பஞ்சஸூக்த ஹோமம் மற்றும் லட்சுமி நரசிம்ம சுதர்சன ஹோமம் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு புண்யாஹவாசனம், லட்சுமி நரசிம்ம ேஹாமம், பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி மூல ராமருக்கும், வீர ஆஞ்சநேயருக்கும் சாற்று முறை நடந்தது.காலை 9.30 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு விசஷே திருமஞ்சனம் நடந்து மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளை பெரும்பாக்கம் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் தலைமையில் பாலாஜி பட்டாச்சாரியார், சக்தி பாலு ஆகியோர் செய்திருந்தனர். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.