பதிவு செய்த நாள்
26
நவ
2019
12:11
சென்னை: பகவான் சத்ய சாய்பாபாவின், 94வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் ஆகியோர் சிறப்பு ஆய்வு கூட்டம் நேற்று (நவம்., 25ல்) நடத்தினர்.
சத்ய சாய் சமிதியின், சென்னை தலைமையகமான சுந்தரம், ராஜாஅண்ணா மலைபுரத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், பகவான் சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழா கொண்டாட ப்பட்டு வருகிறது. இந்தாண்டு, பகவான் சாய்பாபாவின், 94வது பிறந்த நாள் விழா, 9ம் தேதி முதல் நேற்று (நவம்., 25ல்) வரை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ சத்ய சாய் சேவா சார்பில், பல ஆண்டுகளாக, மாதந்தோறும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், பட்டய கணக் காளர்கள் கூட்டமும் நடந்தது.
தினசரி அலுவலக வாழ்க்கையில், நல்ல ஒழுக்கங்களையும், நெறிமுறைகளையும் கடைப் பிடிக்கும் நோக்கத்திற்காக, இந்த சிறப்பு கூட்டம் துவங்கப்பட்டது.
விழாவின் கடைசி நாளான நேற்று (நவம்., 25ல்) காலை, 10:30 மணிக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பட்டய கணக்காளர்கள் இணைந்து, சிறப்பு கூட்டம் நடத்தினர். மதியம், நாராயண சேவா நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு, சுந்தரம் பஜனை குழு சார்பில், சாய் பஜனையும், தொடர்ந்து மங்கள ஆரத்தியும் நடந்தது.இந்த சிறப்பு கூட்டத்தில், முதல்வர் அலுவலக முதன்மை செயலர் சாய்குமார், நிப்பான் பெயின்ட் துணை தலைவர் சங்கரநாரா யணன் ஆகியோர் பங்கேற்றனர்.