மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2019 01:11
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, நேற்று முன்தினம் (நவம்., 24ல்), பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 10:00 மணிக்கு மாத்ருபுரீஸ்வர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணியளில் பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி உள்ளிட்ட திரவியங்களால் நந்தி பகவானுக்கு அபி ஷேகம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.