பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2026 05:03
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சங்கரநாராயணன் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்து உள்ள கைலாய மேலச் சொக்கநாதர் கோயில், தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயில், சுப்ரமணியர் கோயில், குலாலர்பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில். வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.