Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் தேர் ... பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா, பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா, பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

16 மார்
2026
04:03

மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மானாமதுரை பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள தியாக வினோத பெருமாள் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று முடிவு பெற்றதை தொடர்ந்து கடந்த மார்ச்.13ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்தவுடன் இன்று காலை பூர்ணாகுதி முடிந்து புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் காலை 9:00 மணிக்கு மேள,தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக வலம் வந்த பின்னர் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வானில் ஏராளமான கருடன்கள் வட்டமிட அர்ச்சகர்கள் காலை 9:40 மணிக்கு புனித நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோயிலுக்கு முன்பாக அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், பக்தர்கள், பொதுமக்கள்  செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar