வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் சிவலிங்க கற்சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2026 10:03
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
கடலுார், துறைமுகம் அடுத்த சோனங்குப்பத்தை சேர்ந்தவர் விமல்ராஜ், 31; மீனவரான இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்டுவதற்கு நேற்று மாலை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினார். அப்போது, இரண்டரை அடி உயரத்தில் சிவலிங்க கற்சிலை மண்ணில் புதைந்த நிலையில் இருப்பது தெரிந்தது. பின்னர், சிலையை வெளியே எடுத்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். தகவலறிந்த முதுநகர் வருவாய் ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தினார்.