பதிவு செய்த நாள்
04
டிச
2019
02:12
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்களுக்கு, நிரந்தர ’ஷெட்’ அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.கோவையின் அடையாளமாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் பங்கு உத்திரத் தேர்விழா நடைபெறும். கடந்த ஆண்டு திருவிழா நிறைவடைந்து, தேர்கள் தகர ’ஷெட்’ அமைத்து பாதுகாக்கப்பட்டது.மே மாதம் வீசிய சூறாவளி காற்றில் ’ஷெட்’ சேதமடைந்தது.
ஓராண்டுக்கு மேலாகியும், தேர்கள் பாதுகாக்கப்படவில்லை. இதனால், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வந்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.கடந்த, ஜூன் மாதத்தில், தேர்களுக்கு நிரந்தர ’ஷெட்’ அமைக்க, ரூ.64 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று (டிசம்., 2ல்) காலையில், ’ஷெட்’ அமைப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டது. இதனால், சிவ பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.