Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா: ரிஷப ... சபரிமலைக்கு செல்ல பெண்ணுக்கு மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை சபரிமலைக்கு செல்ல பெண்ணுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெருங்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள்: விளக்குகள் விற்பனை ஜோர்
எழுத்தின் அளவு:
நெருங்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள்: விளக்குகள் விற்பனை ஜோர்

பதிவு செய்த நாள்

05 டிச
2019
04:12

உடுமலை: திருக்கார்த்திகை தீப விழாவிற்காக, மண் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது; இந்தாண்டு, லட்சுமி, பிள்ளையார் சிலையுடன் கூடிய, ஐந்து முக விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.தீப ஒளித்திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில்களில், மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.

திருக்கார்த்திகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மண் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது. சிறிய சுட்டி விளக்குகள், டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப, 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு ரூபாய் முதல், 300 ரூபாய் வரை மண் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்தாண்டு, புதிதாக லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் சிலைகளுடன் கூடிய, ஐந்து முக மண் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. முழுவதும் மண்ணால் செய்யப்பட்டு, இயற்கை சாயம் பூசப்பட்டுள்ளது. வியாபாரிகள் கூறியதாவது: மண் விளக்கில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய முறையாகவும்; சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வழிபாட்டு முறையாகும். இதனால், மண் விளக்குகளில் தீபம் ஏற்றும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.அதனால், கார்த்திகை தீப விளக்குகள் விற்பனையும், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சம் மண் விளக்குகள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; தமிழகம் கோயில்களின் நகரமாக திகழ்கிறது என நீண்ட தூர சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கின்னஸ் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செப்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.கேரள மாநிலத்தில் ... மேலும்
 
temple news
மைசூரு; கெல்லஹள்ளி கிராமத்தில் உள்ள அய்யப்ப பக்தர்கள், கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசத்தை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar