பதிவு செய்த நாள்
07
டிச
2019
02:12
உடுமலை:உடுமலை, ஏரிப்பாளையம் தங்காத்தாள் அம்மன் கோவில், கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது.
உடுமலை, ஏரிப்பாளையத்தில் தங்காத்தாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும், 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவிற்கான முளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சி நேற்று (டிசம்., 6ல்) நடந்தது. யாகசாலை பூஜைகள், வரும், 14ம் தேதி நடக்கிறது.அன்று காலை, 9:00க்கு, திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் புறப்பாடு, கணபதி ஹோமம், விக்கிரகங்களுக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு, முதற் கால யாக பூஜை நடக்கிறது.வரும், 15ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை, 5:30 மணிக்கு மேல், 6:30 மணிக்குள், திருக்குடங்கள் புறப்பாடு, கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, விநாயகர், பாலமுருகன் மற்றும் தங்காத்தாள் அம்மனுக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 7:30க்கு, மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.