பதிவு செய்த நாள்
11
டிச
2019
03:12
திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில், நேற்று, மகா தீபம் ஏற்றப்பட்டது. திருக்கழுக்குன்றத்தில், 545 படிக்கட்டுகளுடன், 500 அடி உயர மலை உச்சியில், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கார்த்திகை மகாதீபம், நேற்று மாலை, 6:00 மணிக்கு ஏற்றப்பட்டது.வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில், கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில், செப்புக் கொப்பரையில், நீண்ட திரி அமைத்து மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தீபத்தை தரிசித்து, கிரிவலம் வந்தனர். தொடர்ந்து, இரவு விநாயகர், வேதகிரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதுார் அக்னிபுரீஸ்வரர் கோவிலிலும், நேற்று மாலை, 6:00 மணிக்கு மகாதீபத்துடன், 1008 அகல் தீபம் ஏற்றப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலிலும், கார்த்திகை மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது.