பதிவு செய்த நாள்
11
டிச
2019
03:12
திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை செஞ்சம்ம கோணையில் சிவசக்தி சித்தேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகையையொட்டி, காலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து, திரளான பக்தர்கள், கோவில் வளாகம் முழுதும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.