பழநி: பழநி மலைக்கோயிலில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு நேற்றுமாலை கிரிவல நிகழ்ச்சி நடந்தது. இதில் டி.எஸ்.பி. விவேகானந்தன், இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராமரவிக்குமார், புலிப்பாணி சுவாமிகள், பல்வேறு ஆன்மிக அமைப்பினர் பங்கேற்று கிரிவலம் சுற்றி வந்தனர். அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள், பசுங்கன்றுகளுடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.