விருதுநகர்:விருதுநகர் அருகே பாவாலி காமாட்சி நகர் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோயிலில் வாஸ்து பூஜை மற்றும் சண்டியாக பூஜை மெட்டுக்குண்டு ஞானஒளி சங்கரேஸ்வரர் சுவாமி தலைமையில் நடந் தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர். ஏற்பாடுகளை வெயிலுகந்தாள் அறக்கட்டளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.