திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் கார்த்திகை தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2019 04:12
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. காரைக்கால் திருநள்ளாறு உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தில் ஸ்ரீசனீஸ்வரபகவான் அருள் பாலித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி மிக விமர்சியாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் அகல் தீபம் ஏற்றி கோவிலைச் சுற்றி விநாயகர்.முருகன். சிவன் உள்ளிட்ட முக்கிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின் அகல் தீபத்தை சிவாச்சாரியார்கள் கோவில் அருகில் உள்ள சொக்கப்பானை அகல் தீபம் தீ மூட்டினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விக்ரந்தராஜா. சீனியர் எஸ். பி.மகேஷ் குமார் பன்வால்.தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள். கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பின் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.இதுபோல் காரைக்காலில் முக்கிய கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.