சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடந்தது. சித்தருக்கு, பால், பன்னீர், சந்தனம் உட்பட 21 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு தீபாராதனையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். அன்னதானம் வழங்கினர்.