ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2019 11:12
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோயிலிலிருந்து எழுந்தருளிய ஆண்டாள்-ரெங்கமன்னார் மற்றும் பெரியபெருமாள், மாடவீதி சுற்றி வந்தனர். ஆண்டாள் மற்றும் பெரியபெருமாள் சன்னிதி முன்பு சொக்கப்பனை கொளுத்தபட்டது.தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர்.