பதிவு செய்த நாள்
13
டிச
2019
02:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், 30 ஆயிரம் திருவிளக்குக ளுடன், கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருநாளன்று, 30 ஆயிரம் தீபங்கள் ஏற்றி, திருவிளக்கு வழிபாடுடன், சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தீபத்திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில், 30 ஆயிரம் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டது. கோவில் வளாகம், மண்டபம், நடைபாதை முழுவதும் தீபங்கள் அலங்கரிக்கப்பட்டு ஒளி வீசியது.தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், மகா விஷ்ணு தீப விழா நடந்தது.விழாவையொட்டி, காலை, 9:30 மணிக்கு திருமஞ்சன சேவை, அலங்கார சேவையும்; மாலை, 6:30 மணிக்கு மகா விஷ்ணு தீபம் ஏற்றுதல், தீபாராதனை தரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.