பதிவு செய்த நாள்
13
டிச
2019
02:12
பரங்கிப்பேட்டை:புதுக்குப்பம் கடற்கரையில், இயற்கை சீற்றங்கள் தணிய வேண்டி பஞ்ச பூத வழிபாடு நடந்தது.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களில் இயற்கை சீற்றங்கள் தணிய வேண்டி, கோ மாதா பூஜை மற்றும் பஞ்ச பூத வழிபாட்டை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் கிருபானந்தம், துணைத் தலைவர் முருகு வெங்கட்ராமன், செல்வராஜ், ஜெயபால், சங்கரன், சுப்ரமணியன், பழனிவேல், ஜெய்சங்கர், கிராம தலைவர் கோவிந்தசாமி, துணைத் தலைவர் குமார், செயலர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.