பெண்ணாடம்:கார்த்திகை தீபத்தையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 11) காலை 8:30 மணியளவில் மூலவர் பிரளயகாலே ஸ்வரர், அழகிய காதலி அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, வினை தீர்த்த விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் கோவிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு பூஜை நடந்தது.