சிவகங்கை:சிவகங்கை நேருபஜார் செல்வகணபதி ஆலயத்தில் நாளை 15ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது.காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 9:00 மணிக்கு மகா அபிஷேகம், பகல் 11:00 மணிக்கு தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு சங்கடஹரசதுர்த்தி, சிறப்பு அலங்காரத்தில் பூஜை, மாலை 5:30 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.