பதிவு செய்த நாள்
16
டிச
2019
12:12
தேவாரம்:தேவாரம் சங்கப்பன் கண்மாய் அருகே வழி விட்ட அய்யனார் கோயில் அமைந்து ள்ளது. இதன் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீரபத்ரர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது.
பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் சீனிவாச அய்யங்கார், உதவி அர்ச்சகர் பத்மனாபன் நடத்தி வைத்தனர்.தேவாரம் இளைய ஜமின்தார் சிவதனி ராஜா தலைமை வகித்தார். கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள் அய்யனார், குணசேகரன், குருசாமி முன்னிலை வகித்தனர். பா.ஜ., மாவட்ட செயலாளர் சிங்கராஜ், உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கதிரேசன், தேவாரம் நகர செயலாளர் சீனிவாசன், தி.மு.க., நகர செயலாளர் பால்பாண்டி பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மேடை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரு நாட்கள் நடந்த யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாளில் கணபதிஹோமத்தை தொடர்ந்து திவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாரா தனைக்குப்பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.