பதிவு செய்த நாள்
16
டிச
2019
12:12
சிதம்பரம் : சிதம்பரம் பிரம்மராயர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் அடுத்த பரமேஸ்வரநல்லுார் பிரம்மராயர் என்கிற ஓம் ஆகாச சாஸ்தா திருக் கோவில் மற்றும் விநாயகர், வீரன், நவக்கிரகம் உள்ளிட்ட சுற்று பிரகார கோவில்கள் புதுப் பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நேற்று 15ம் தேதி நடந்தது. இதனையொட்டி கடந்த 13ம் காலை யாகசாலை பூஜைகள் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அமைச்சர் சம்பத் பங்கேற்று துவக்கி வைத்தார். கடந்த 14ம் தேதி காலை இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
நேற்று 15ம் தேதி காலை 7 மணிக்கு 4ம் கால யாக சாலை பூஜை, சிறப்பு வழிபாடுகள், பூஜை, மகா தீபாராதனை நடந்தது.பகல் 11 மணிக்கு கடம் புறப்பாடு, 11.20 மணிக்கு பிரம்மராயர் சுவாமி சன்னதி மற்றும் பரிகார கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர். 12 மணிக்கு பிரம்மராயர் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
விழாவில், அமைச்சர் சம்பத், சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், முன்னாள் அமைச்சர் தாமோ தரன், அமைச்சரின் சகோதரர் சம்மந்தம் குடும்பத்தினர், அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, இளங்கோவன், கலைமணி, வைத்தியலிங்கம், வீரமூர்த்தி, பாஸ்கர், சுந்தர் உட்பட அ.தி.மு.க., பிரமுகர்கள் மற்றும் கோவில் ஆய்வாளர் ராமநாதன், செயல் அலு வலர் மஞ்சு உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.