Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆந்திராவில் இந்து ஆலயங்கள் சுத்தம் ... வரும் 26ல் சூரிய கிரகணம்: திருப்பதி கோவில் மூடல் வரும் 26ல் சூரிய கிரகணம்: திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலர்ந்தது மார்கழி: துவங்கியது சுத்தமான காற்றை சுவாசிக்கும் காலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2019
09:12

மதுரை: அதிகாலையில் தெருக்களை அலங்கரித்த வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்கள் என, இந்தாண்டு உற்சாகமாக மார்கழி மாதம் துவங்கி விட்டது.

Default Image
Next News

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தெருக்களில் வெண்ணிற அரிசி மாவு உட்பட பல்வேறு வண்ணங்களில், அழகிய கோலங்கள் இடப்படுகின்றன. அதிகாலையில் வண்ணக் கோலங்களும், பஜனை முழக்கங்களுமாக மார்கழி களைகட்டியுள்ளது. அதிகாலை முதல் அனைத்து பெருமாள் மற்றும் சிவன் கோயில்களில், திருப்பாவை, திருவெம்பாவை முழங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மார்கழியில் அதிகாலையில் வீசும் குளிர்ந்த சுத்தமான காற்று சுவாசத்திற்கு ஏற்றது. இறைவன் மீதான பஜனை பாடல்களை பாடவும், கேட்கவும், மாசில்லாத இயற்கை காற்றை சுவாசிக்கவும் கிடைக்கும் அரிய வாய்ப்பு, இந்த மாதத்தில் தான் வாய்க்கிறது. மார்கழி கோலத்தின் சிறப்பு, சாணம் தெளித்து கோலமிட்டு அதன் மேல் பூசணி பூ வைப்பது தான். அதனால், கிருமிகள் அகன்று நோய் தொற்று பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ஆனால், இன்று ஒரு சில கிராமங்களில் மட்டுமே, பூசணி பூ கோலத்தை பார்க்க முடிகிறது.பெரும்பாலான பெண்கள், அதிகாலையில் நீடிக்கும் அடர்த்தியான பனி பொழிவு மற்றும் மர்ம நபர்களின் நகை பறிப்பு காரணமாக, முன் இரவிலேயே கோலம் போட்டு விடுகின்றனர்.


மார்கழி முதல் நாளில் சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் பஜனை பாடி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் பேரூர் பட்டீஸ்வரர் , திருப்பூர் அவிநாசி, கோவை, மதுரை என அனைத்துக்கோயில்களிலும் பஜனை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.  இன்று (டிச.,17) முதல் தை முதல் நாள் வரையில், கோவில்களில் மார்கழி மாத வழிபாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar