பதிவு செய்த நாள்
17
டிச
2019
10:12
திருப்பதி: வரும், 26ம் தேதி காலை சூரிய கிரகணம் நடக்க உள்ளதை முன்னிட்டு, ஏழுமலையான் கோவில், 13 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வரும், 26ம் தேதி காலை, 8:08 முதல், 11:06 மணி வரை, சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிரகண காலத்திற்கு, 6 மணி நேரத்திற்கு முன்ன தாகவே, கோவில்கள் மூடப்படுவது வழக்கம். எனவே, 25ம் தேதி இரவு, 11:00 முதல், 26ம் தேதி மதியம், 12:00 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது. அதற்கு பின், கோவில் திறக்கப்பட்டு புண்ணியாவசனம், சுத்தி உள்ளிட்ட காரியங்கள் முடிந்த பின், 2:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு, 26ம் தேதி காலை, திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சூரிய கிரகணம் நிகழும் காலகட்டத்தில், பள்ளி களுக்கு அரையாண்டு விடுமுறை உள்ளதால், பக்தர்கள் கோவில் மூடும் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.