பெண்ணாடம் : மார்கழி முதல் நாளையொட்டி, பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவி லில் சிறப்பு வழிபாடு நடந்தது. .இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேதநாராயண பெரு மாள் சுவாமிக்கு நேற்று 17ம் தேதி காலை, 5:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம், காலை 6:15 மணியளவில் தீபாராதனை நடந்தது.
ஏராளமானோர் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடி கோவில் வளாகத்தை வலம் வந்து, வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த வேதநாராயண பெருமாள் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
இதேபோன்று, ஈச்சங்காடு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்; பெண்ணாடம் பிரளயகாலே ஸ்வரர் கோவில்; இறையூர் தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில்களில் அதிகாலை 4:30 மணி யளவில் நடைதிறப்பு, காலை 5:15 மணியளவில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு; காலை 6:00 மணியளவில் தீபாராதனை நடந்தது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.