அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் டிச. 30 சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2025 05:12
காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் டிச. 30 ல் நடைபெறுகிறது. அன்று காலை பெருமாள் சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து, நித்தியபடி பூஜைகள் முடிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளுவார். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாது பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். முன்னதாக டிச. 29 மாலை 6 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார். விழா ஏற்பாடுகளை, சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பரம்பரை அறங்காவலர் மீனாட்சி, செயல் அலுவலர் ராமநாதன் செய்து வருகின்றனர்.