19ம் நூற்றாண்டில் ரஷ்ய நாட்டை மூன்றாம் பிரடெரிக் வில்லியம் ஆட்சி செய்த காலத்தில் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. இதனால் அரசு கருவூலமே காலியாகி, நாட்டின் வளர்ச்சி பாதித்தது. மறுசீரமைப்புக்கு பெரும் பொருள் தேவைப்பட்டது. மக்களை நல்லமுறையில் வாழ வைக்க மன்னர் விரும்பினார். அதே சமயம் எதிரிகளுடன் சமாதானம் செய்ய மனம் சம்மதிக்கவில்லை. நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ""பெண்களே! உங்களிடம் உள்ள தங்க, வெள்ளி ஆபரணங்களை அரண்மனைக்கு எடுத்து வாருங்கள். அவை நாட்டின் நன்மைக்காக பயன்படுத்தப்படும்” என்றதோடு, ""தங்கத்திற்கு மாற்றாக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இரும்பு, வெண்கல ஆபரணங்கள் வழங்கப்படும்” என அறிவித்தார். மக்களும் ஏற்று நகைகளை வழங்கினர். நாட்டின் மானம் காத்திட, தியாக குணம் நிறைந்தவர்களாக மக்கள் இருந்தனர். பணத்தை சேர்த்து வைப்பதை விட ஆபத்து காலத்தில் பயன்படுத்துவதே நல்லது. "" பேராசைக்கு இடம் அளிக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்; மிகுந்த செல்வம் இருந்தால் ஆபத்து காலத்தில் மற்றவருக்கு உதவுங்கள்” நாட்டின் மீது பற்று வைப்பவனே நல்ல குடிமகன்.