ஒரு பெண்மணியிடம் பணம் குவிந்திருந்தது. ஆனால் மகிழ்ச்சி மருந்துக்கும் இல்லை. ஒருநாள் அவள் தற்கொலை செய்யும் முடிவுடன் ஆற்றுப்பாலத்தின் மீது ஏறினாள். அங்கு ஒரு சிறுவன் ஏக்கத்துடன் நின்றிருந்தான். அவனிடம், ""தம்பி! உனக்கு என்ன வேண்டும்? எனக் கேட்டாள். ""பசிக்கிறது. என் பெற்றோரும் பசியால் வாடுகின்றனர். சாப்பிட ஏதாவது கொடுப்பீர்களா?” என அழுதான். அவனது வீட்டுக்குப் புறப்பட்டாள். வழியில் சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்தாள். சிறுவனின் பெற்றோருக்கு சாப்பாடு, துணிமணி வாங்கிக் கொடுத்தாள். அவர்களின் முகமலர்ச்சி கண்டு மகிழ்ந்தாள். ""ஆண்டவரே! எனக்கு செல்வத்தை அளித்ததன் நோக்கமே ஏழைகளுக்கு உதவுவது என்பதை உணராமல் இருந்தேனே! மகிழ்ச்சி என்பது பிறருக்கு உதவுவது தான்! என் சொத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்வேன். இனி தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டேன்” என ஜெபித்தாள்.