பதிவு செய்த நாள்
19
டிச
2019
11:12
மானாமதுரை, சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட இக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி அஷ்டமி திதியில் சிவபெருமான் உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் உற்சவம் நடைபெறும். அப்போது ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் சப்பரத்தேர்களில் எழுந்தருளி ஜீவராசிகளுக்கு படியளக்கும் வகையில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வருவார்கள். இந்த விழாவுக்காக கீழமேல்குடி கிராமத்தார் இந்தக் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு பயன்படுத்தும் சப்பரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோயிலுக்கு புதிதாக அஷ்டமி சப்பரத்தேர் உருவாக்க பக்தர்களால் முடிவு செய்யப்பட்டு தற்போது ரூ 10 லட்சம் செலவில் 4 டன் எடையில் புதிதாக அஷ்டமி சப்பரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற மார்கழி அஷ்டமி உற்சவத்தில் புதிதாக செய்யப்பட்ட சப்பரத்தேரில் சோமநாதர் சுவாமி, மற்றொரு சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளி பா க ப த் அக்ரஹாரம், மெயின் ரோடு, நான்கு ரத வீதிகளில் பவனி வந்த போது ஏராளமான பக்தர்கள் ஜீவராசிகளுக்கு உணவு அளிக்கும் வகையில் சப்பரங்களுக்கு முன்னும், பின்னும் அரிசி, நவதானியங்களை தூவிய படி சென்றனர். சுவாமி கள் வீதிவுலா வரும் போது ஏராளமான வீடுகள் முன்பு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டை ர். சப்பரத்திற்கு முன்பாக செந்தில் சிவனடியார் தலைமையில் கைலாயவாத்யம் இசைக்கப்பட்டது, ஏராளமான பக்தர்கள் சப்பரங்களை இழுத்து சென்றனர். சப்பரங்கள் கோயிலை வந்தடைந்தவுடன் சிறப்பு பூஜைகள் , தீபாராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணன், சிவாச்சாரியார்கள் சக்கரை, குமார், ராஜேஸ், கோபி உள்பட பலர் செய்திருந்தனர்.