பதிவு செய்த நாள்
19
டிச
2019
12:12
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், ஆதிபராசக்தி சித்தர்பீட, செவ்வாடை பக்தர்கள், சுற்றுலாவிற்கு குவிகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார், சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவில், தமிழக, பிற மாநில பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது.கோவிலில், சித்திரை பவுர்ணமி, தைப்பூசம் என, உற்சவங்கள் நடைபெறும்போது, பக்தர்கள், செவ்வாடை அணிந்து குவிகின்றனர்.தமிழக, ஆந்திர, கன்னட பக்தர்கள், மாமல்லபுரம் கடலில் நீராடிய பிறகே, இக்கோவிலில் வழிபடுவர். தற்போதும், பல பகுதிகளிலிருந்தும், பக்தர்கள் குவிந்து, மாமல்லபுரம் கடலில் நீராடி, சிற்பங்கள் காண்கின்றனர். இக்கூட்ட சுற்றுலாவால், மாமல்லபுரம், செவ்வாடை பக்தர்களால் நிரம்பியுள்ளது. கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளில், வியாபாரம் களைகட்டுகிறது.