மதுரை : மதுரை ராமகிருஷ்ண மடத்தில் சாரதா தேவியார் ஜெயந்தி விழா தலைவர் கமலாத் மானந்தர் தலைமையில் நடந்தது. சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்கள் திருவுருவ பட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.கமலாத்மானந்தர் பேசுகையில், ”மெய்ஞானம் ஒன்று தான் மனிதனு க்கு மன அமைதியையும், நன்மைகளையும் தரும். விஞ்ஞான சுகபோகங்களால் மனிதருக்கு மன அமைதி கிடைக்காது. மெய்ஞானத்தால் மரணத்திற்கு பிறகு மீண்டும் பிறவி வருவதை தடுக்க முடியும். ஒரு முறையாவது இறைவனிடம் பிரார்த்தனை செய்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இறைவன் நாமத்தை ஜபம் செய்வதால் மனிதன் துாய்மையானவனாக ஆகிறான்” என்றார்.