பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி யை முன்னிட்டு, பைரவர் சன்னதியில் மகா அஷ்டமி யாகம் நடந்தது.
பைரவர் சன்னதியில், நேற்று முன்தினம் 19 ல், தேய்பிைற அஷ்டமி முன்னிட்டு, தேய்பிறை அஷ்டமி மகாயாகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பைரவர் சன்னதியில் யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வேத மந்திரம் முழங்க யாக பூஜைகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு கலச நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை விசேஷ பூஜை நடந்தது. பின்னர் இரவு 7:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.